Kogilavani / 2020 ஒக்டோபர் 24 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட மத்திய சந்தைப் பகுதியிலேயே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள குளிர்ந்தச் சூழலே இதற்குக் காரணம் என்றும், கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ரூவன் விஜேமுனி தெரிவித்தார்.
பேலியகொட மீன் சந்தையில், கடந்த நான்கு தினங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 471 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இது ஐந்து மடங்கு அதிகரிப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்படிச் சந்தையில் மீன் வியாபாரிகளும் ஊழியர்களுமே அதிகமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்ச் மாதத்தைவிட இம்முறை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளதாகவும் நேற்று (23) மட்டும் 865 பேர் புதியத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago