2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூலை 11 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை, லுணாவ பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டில் 39 வயதான ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நேற்று இரவு 12.25 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அங்குலான பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர், வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியபோது,  துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--