2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பல புதுமுகங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக நியமனம்

Super User   / 2010 ஜூன் 03 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக மரபுரிமைக்கைத்தொழில் மற்றும் சிறு முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வட மாகா ஆளுநார் ஜீ.ஏ. சந்திரசிறியும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக கைத்தொழில் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக மீன் பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயும் கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரா பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரா நாடளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--