J.A. George / 2020 நவம்பர் 24 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட பிளையான் நீண்ட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு, மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, பிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்படதுடன், வழக்குடன் சம்பந்தப்படட ஏனைய ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கு, டிசெம்பர் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி கொலை சம்பவம் தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ வீரரான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
34 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
37 minute ago
44 minute ago