2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பவித்ரா குழுவுக்கு ‘பாணி’ கசந்தது

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை -மஹா பத்திரகாளி தேவாலயத்தின் பூசகரால், கொரோனா தொற்றைக் குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட மூலிகை பாணியை தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கான முறையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில், நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இன்னும் கூடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியால் குறித்த குழு நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் இக்குழு இதுவரை எவ்வித கலந்துராயாடல்களையும் முன்னெடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் சேனக பிலபிட்டியவின் தலைமையில், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, பேராசிரியர்களான சிசிர சிறிவர்தன, சரோஜ ஜயசிங்க, லேகம்வசம், ஜனக டீ சில்வா, சேம் குலரத்ன, கமனி வணிகசூரிய ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .