2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

பவித்ராவுக்கு எதிராக ஐந்து உறுப்பினர்கள் சட்டநடவடிக்கை

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 04 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக, இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர்.

இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை மருத்துவச் சபையின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய நியமிக்கப் பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய, மருத்துவச் சபையின் உறுப்பினர்களை நீக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

மருத்துவச் சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஹரேவிந்திர சில்வா கூறியுள்ளார். எனினும் ஏனைய உறுப்பினர்கள் விலக போவதில்லை எனவும் அறிவித்துள்ளனர்.

மருத்துவச் சபையின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், மருத்துவ கட்டளைச் சட்டத்துக்கு அமைய சுகாதார அமைச்சருக்கு இருந்தாலும் நீக்கும் அதிகாரம் இல்லை என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அவர்கள் தீர்மானித்தனர். ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக மருத்துவச் சபையின் நிர்வாகத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .