2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம துசித குமார

களுத்துறையில் இருந்து அளுத்கம பகுதிக்கு,  பொதுப் போக்குவரத்து பஸ்ஸில் பயணம் செய்த,  அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 49 வயதுடைய பெண் ஒருவரிடம், பாலியல் சில்மிஷத்தில்  ஈடுபட்ட  இளைஞனை,  அளுத்கம பொலிஸார்  இன்று  (30) கைதுசெய்துள்ளனர்.

பஸ்லில் பயணம் செய்யவாறே, ​ பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, அளுத்கம பொலிஸார் பஸ்ஸை இடைநிறுத்தி, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கித்துல்கல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் அவர் பணியாற்றி வருவதாகவும்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--