Editorial / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (பாதீடு) தோற்கடிப்பதற்கு முயற்சிகள், தற்பொழுதிருந்தே மேற்கொள்ளப்படுகின்றனவென, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து பிரதான அரசியல் கட்சிகள் சில, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனவெனவும், அதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்களுடைய ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர் எனவும் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த முயற்சிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஒத்துழைப்பு நல்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனரென, அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
இதில், அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் இணைந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரடங்கிய அணி, பிரதான வகிபாகத்தை மேற்கொண்டுள்ளது என்றும், வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
6 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
15 Nov 2025