2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

பாதுகாப்பு படைகளின் பிரதானி இன்று ஓய்வு

Editorial   / 2019 டிசெம்பர் 31 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன தனது 39 வருடகால சேவையினை நிறைவுசெய்து இன்று (31) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படைகளில் நீண்ட கால சேவை மற்றும் சிரேஷ்ட அதிகாரியாக உள்ள அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்ன, 1980 ஆம் நவம்பர் 01 ஆம் திகதி கடற்படையில் இணைந்து கொண்டார்.

2015 ஜுலை மாதம் 11ஆம் திகதி முதல் 2017 ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதிவரை கடற்படை தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

2017 ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் தற்போது வரை பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X