Editorial / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வலியுறுத்தியும், பிரித்தானியாவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவது தொடர்பிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஓன்று நேற்று லண்டனில் (07)இடம்பெற்றது.
யுத்தம் இடம்பெற்ற போதும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் பலர் காணாமல் போயிருந்தனர். பலர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரியாத நிலையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன என நீதி கோரி ஈழத்தில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் ஆறு மாதத்தை கடந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற பிரித்தானியாவும்,சர்வதேச சமூகமும் வலியுறுத்த வேண்டும்.
அத்துடன்,கைதுகள்,மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு, தமிழ் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படல் ஆகியவை தொடர்ந்த வண்ணம் உள்ளதனால், இதற்கு எதிராக பிரித்தானியாவும், சர்வதேச சமூகமும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களும், அதன் ஆதரவாளர்களும், ஈழ உணர்வாளர்களும் வலியுறுத்தினர்.
33 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
4 hours ago