Yuganthini / 2017 ஜூலை 09 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட, அன்னதான மண்டபம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இன்று (09) திறந்து வைக்கப்பட்டது.
திருவிழா காலங்களில், கதிர்காமத்துக்கு வருகைதரும் அடியார்களுக்கு, அன்னதானம் வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த, 100 ஆண்டுகள் பழமையான மண்டபத்துக்குப் பதிலாக, ஒரே தடவையில் ஆயிரம் அடியார்களுக்கு உணவளிக்கக்கூடிய வசதிகளுடன், புதிய இருமாடி மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையினதும் கொடைவள்ளல்களினதும் நன்கொடையால், 180 மில்லியன் ரூபாய் செலவில், இந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல், கதிர்காமம் புனித பூமிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வரலாற்று பெருமைமிக்க கிரிவிகாரையில் வழிபாடுகளை முடித்துக்கொண்ட பின்னர், அன்னதான மண்டபத்தின் பெயர் பலகையை, திரைநீக்கம் செய்து, திறந்து வைத்தார்.
கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை தலைவரான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன உள்ளிட்டோர், இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்.

51 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago