Nirshan Ramanujam / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசமைப்பு தொடர்பான அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இறுதிநாள் விவாதம், அரசமைப்புச் சபையில் இன்று (11) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இது தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்புத் தொடர்பாக நாடாளுமன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், ஏற்கெனவே நான்கு நாட்கள் இடம்பெற்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் 29, 30, 31 மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் இவ்விவாதம் நடைபெற்ற நிலையில், மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே மூன்று நாள் விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக நான்கு நாட்கள் நீடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த சில வாரங்களாக வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதங்கள் இடம்பெற்று வந்தன. இந்நிலையிலேயே, அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான இறுதிநாள் விவாதம் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
2 hours ago