Editorial / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மக்களின் பணத்தை நாசமாக்கின், நாடாளுமன்றத்துக்கு, யாராவது மேலேவந்து குண்டுவீசாவிடின், பூமியதிர்ச்சி ஏற்பட்டு, நாடாளுமன்றமே மூழ்க வேண்டும்” என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்த அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவ்வாறு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், நாடாளுமன்றத்தின் விருப்பமின்றிச் செயற்படுவதற்கு, மக்கள் வாக்களிக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாட்டைச் சீர்குலைப்பதற்கு, நாடாளுமன்றத்தை மோசடியான முறையில் பயன்படுத்துகின்றனர்.
அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பலவற்றையும் நாங்கள் எடுப்போம்” என்றார். “நாட்டைப் பிரிக்கும் அரசமைப்புக்கு எதிராக நாங்கள் செயற்படுவோம். அதற்கு ஒருபோது இடமளிக்கமாட்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago