2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

எரிவாயு தட்டுப்பாடு : போராட்டம் நடத்த திட்டம்

Freelancer   / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணக் கோரி, எரிவாயு நிறுவனத்துக்கு முன்னால் இன்று தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தலைமையில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகத்தில் எந்த குறைபாடும் இல்லை என்றும், சுமார் 80,000 கொள்கலன்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிவாயு தேவையுடைய பெரும்பாலான பகுதிகளில் லிட்ரோ நிறுவனமும், மீதமுள்ள பகுதிகளில் லாஃப் நிறுவனமும் பூர்த்தி செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .