Janu / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படை, திங்கட்கிழமை (23) அன்று கற்பிட்டி முகத்துவாரம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விஜய கற்பிட்டி முகத்துவாரம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு சோதனை செய்யப்பட்டதுடன் அதிலிருந்து 685 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள், கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.


14 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago