2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பெண்களை துஷ்பிரயோகப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டவர் கைது

Super User   / 2010 மே 15 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி அவர்களுடைய தங்க நகைகளையும் கொள்ளையிட்டு வந்த சந்தேக நபரொருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் பெண்களை மயக்கமடையும் வகையில் மாத்திரைகளை வழங்கியுள்ள இந்த சந்தேக நபர், அவர்கள் மயக்கமுற்ற பின்னர் விடுதிகளிலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கண்டி, குளியப்பிட்டிய, கல்கிஸை, மாத்தறை, நிட்டம்புவ, குருவிட்ட, செட்டியார்தெரு, நீர்கொழும்பு, கோட்டை மற்றும் பேலியகொட போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 35க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட தாதியர் மற்றும் ஆசிரியர்களே குறித்த நபரால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.      

  Comments - 0

  • Lankan Sunday, 16 May 2010 04:00 AM

    இவருக்கு சரியான தண்டனை கிடைக்கவேண்டும். ஆனால் பெண்கள் இவருடன் ஹோட்டல்களுக்கு செல்லும் அளவுக்கு கெட்டுப்போய் இருக்கிறார்கள். இவர் தூக்க மாத்திரை பாவித்தது இவர்களை கற்பளிக்கவள்ள, நகைகளை களவாட. இப்பெண்கள் இவனை பொது இடங்களில் சந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது. பெண்களும் இவருக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--