2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

பெறுபேறுகள் தாமதத்துக்கு இதுதான் காரணமாம்

Editorial   / 2018 பெப்ரவரி 10 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மாலை 4 மணிக்கு நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் முதலாவது பெறுபேற்றை இரவு 8 மணிக்கு முன்னதாக வெளியிடுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

எனினும், இரவு 11:20 ஆகியும் உத்தியோகபூர்வமாக எந்தவொரு பெறுபேறும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், வாக்குகளை மீண்டும் எண்ணுவதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சில, பிரதேச சபைகள், நகர ​சபைகள் மற்றும் மாநகர சபைகள் ஆகியவற்றுக்கான வாக்குகளை, மீளவும் எண்ணுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, மீளவும் எண்ணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .