2020 ஜூன் 01, திங்கட்கிழமை

பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர் வீடு திரும்பவில்லையென முறைப்பாடு

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் கடந்த மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரித்துள்ளனர்.

அம்பலாந்தோட்டை, ரிதியகம பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், குறித்த நபர் மீண்டும் வீடு வந்து சேரவில்லை என, நேற்று (21) இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போன நபர் தனிமையில் வாழ்ந்து வந்ததாக முறைப்பாடு பதிசெய்த அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

காணாமல் போன நபர் தொடர்பில் அம்பலாந்தோட்டை மற்றும் கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X