Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து, மக்கள் எதிர்பார்த்தது இவ்வாறான அறிக்கை இல்லையென்று தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த அறிக்கை, திருப்தியான அறிக்கையெனத் தான் நம்பவில்லை என்றார்.
சுற்றாடல் அமைச்சில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, இந்தத் தாக்குதல் குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
'இந்த ஆணைக்குழு குறித்தோ, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தோ தான் எந்தவோர் அபிப்பிராயத்தையும் முன்வைக்கப் போவதில்லை. ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில், எமது சட்டத்தரணிகள் குழுவுடன் இது குறித்து முழுமையாக ஆராயவுள்ளோம்' என்றார்.
மக்கள் எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல; அறிக்கை தொடர்பில் எமக்குள் முரண்பாடுகள் பலஉள்ளன. உலகில் எந்தவோர் இடத்திலும் தீவிரவாதக் குழுவைச் செயற்படுத்தும் தலைவர் ஒருவர், தற்கொலை செய்துகொள்ள மாட்டார். எனவேஇ இந்தத் தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான், ஏன் தற்கொலை குண்டுதாரியானார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சஹ்ரானை வழிநடத்தியவர் யார், என்ற சந்தேகம் எமக்கிருந்தாலும் அதற்கான பதில் இவ்வறிக்கையில் இல்லை எனத் தெரிவித்த அவர்,
இந்தத் தாக்குதலுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் அல்லது வேறு குழுவினர் அல்லது இதில் சர்வதேசத்தின் தலையீடு உள்ளதா என்ற சந்தேகம், பொதுமக்களுக்கு இருந்தாலும் அது தொடர்பான எவ்வித தகவல்களும் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்றார்.
அதுமட்டுமன்றி, இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில விடயங்களுடன் எம்மால் இணங்க முடியாதுள்ளது என்றும் தெரிவித்தார்.
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago