2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

‘மகா சங்கத்தினருடன் இப்போதைக்கு பேச்சில்லை’

Yuganthini   / 2017 ஜூலை 10 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்புத் தொடர்பாக வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னரே, பௌத்த மகாசங்கத்தினரைச் சந்தித்து, விளக்கமளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தேசித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவரும் முன்னர், மகா சங்கத்தினரைச் சந்திப்பதில் அர்த்தமில்லை. ஆகையால், இடைக்கால அறிக்கை வெளிவந்ததும், அதிலுள்ள சரத்துகளைத் தெளிவுபடுத்தும் நோக்கில் மகா சங்கத்தினரைச் சந்திக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்திருக்கிறது” என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .