Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஜூலை 08 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்களின் விலை வீழ்ச்சியடைந்திருந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த மகா போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற்களை விற்பனை செய்வதில் பாரிய நட்டத்தை எதிர்நோக்கினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் நெற்களை ப.நோ.கூட்டுறவு சங்கங்களின் ஊடாக கொள்வனவு செய்வதற்காக திறை சேரியுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கிரான், பட்டிப்பளை, பழுகாமம் மற்றும் வவுணதீவு கூட்டுறவு சங்கங்களினுடாக சம்பா நெல் 30 ரூபா வீதமும், ஏனைய நெல் 28 ரூபா வீதமும் கொள்வனவு செய்யப்படும். அத்துடன் இங்கு கொள்வனவு செய்யப்படும் நெல் அரிசியாக்கப்பட்டு இம்மாவட்டத்துக்குள்ளேயே கூட்டுறவு சங்கங்களினூடாக விற்பனை செய்யப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago