2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

மாணவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை

ஆர்.மகேஸ்வரி   / 2020 ஜனவரி 29 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் குறித்து பரவும் பொய்யானத் தகவல்களால் மாணவர்களும் பெற்றோரும் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மாணவர்கள்  முகக் கவசத்தை அணியுமாறு அரசாங்கம் வலியுறுத்தவில்லை என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

பிரதமர் மஹிந்த தலைமையில் பல அமைச்சுகளின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) நடைபெற்றதாகத் தெரிவித்த அவர், இதன்போது தற்போது நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதி குறித்து அவதானம் செலுத்தப்பட்டதென்றார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, சுற்றுநிருபம் ஒன்று பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சோ, சுகாதார அமைச்சோ முகக் கவசத்தை  அதிக விலை கொடுத்து வாங்கி அணியுமாறு மாணவர்களுக்கோ மக்களுக்கோ ஆலோசனை வழங்கவில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .