2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

மத்தியில் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு

Nirosh   / 2021 ஜனவரி 18 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  40 புதிய தொற்றாளர்கள் மத்திய மாகாணத்தில் இன்று (18)இனங்காணப்பட்டுள்ளனர். மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 86ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் தொடர்ந்து இனங்காணப்பட்டு வருகிறார்கள். கண்டியில் 2039 பேருக்கும், நுவரெலியாவில் 700 பேருக்கும், மாத்தளையில் 347 பேருக்கும் இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம், கண்டியில் 24 பேருக்கும், நுவரெலியாவில் 10 பேருக்கும், மாத்தளையில் 6 பேருக்கும் இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களில் 7இல் இதுவரையில் 1075 தொற்றாளர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இதுவரையில் 23 கொரோனா மரணங்கள் மத்திய மாகாணத்தில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .