2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

மத்திய வங்கியிலும் கொரோனா

Nirosh   / 2020 நவம்பர் 21 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

எனினும் மத்திய வங்கியின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு வழிநடத்தக்கூடியப் அவசரப் பணிக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய மத்திய வங்கியின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .