2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மதுபான விருந்தில் பங்கேற்ற 16 பேர் கைது

S. Shivany   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரணை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தொன்றில் கலந்துகொண்டிருந்த, 16 பேர் நேற்று(21) இரவு  கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.

முகநூல் நண்பர்களால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

ஹபரணை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டோரில் பெண்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார் இவர்கள் குருநாகல், ஹபரணை, கெக்கிராவை, திருகோணமலை, மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22-28 வயதுடையவர்கள்  பொலிஸார் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
 
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .