2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

முகக் கவசத்துக்குள் புகைந்த பீடி

R.Maheshwary   / 2021 மே 13 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீடியொன்றை பற்றவைத்தவாறு சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், வீதியில் பொலிஸாரைக் கண்டவுடன், வாயில் வைத்திருந்த பீடியுடன் முகக் கவசத்தை அணிய முற்படுகையில் பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று முன்தினம் (11) கிரிஉல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

முகக் கவசங்களை அணியாதவர்களை கைதுசெய்வதற்கான பணியில், கிரிஉல்ல பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில், நபரொருவர் சைக்கிளை நிறுத்தி அவசரஅவசரமாக முகக் கவசத்தை அணிவதை பொலிஸார் கண்டுள்ளதுடன்,அந்த முகக் கவசம் தீப்பற்றுவதையும் அவதானித்து கூக்குரலிட்டு முகக் கவசம் அணிவதை தடுத்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்ட பதற்றத்தில் வாயில் பீடி இருப்பதை மறந்து தான் முகக் கவசத்தை அணிந்து கொண்டதாகவும் முகக்கவசத்தை அணியாமைக்கு மன்னிப்பும் கோரியுள்ளார் அந்த முதியவர். முதியவரின் இச்செயற்பாட்டை பார்த்து சிரித்த பொலிஸார்,இனிமேல் இவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X