2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மரண தண்டனை அமுலாக்கத்துக்கு டில்ஷான் ஆதரவு

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானமானது ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், போதைப்பொருள் குற்றவாளிகள் மாத்திரமின்றி சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"நாட்டில் போதைப்பொருள் பாவனை, பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. மரண தண்டனையை அமுல்படுத்துவது சரியான தீர்மானமாக அமையும். இல்லையேல் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும்" என முன்னாள் கிரிக்கெட் வீரர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .