Editorial / 2021 மார்ச் 08 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனைய விவகாரத்தின் உண்மைத் தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்த தேசிய வளங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர், தேசிய வளங்களை விற்கும் உரிமை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்களுக்குக் கிடையாது என்றார்..
கொழும்பில் நேற்று (7) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கு கொள்ள நேரிடும். மேற்கு முனைய அபிவிருத்திக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என்றும், 'அதானி' நிறுவனம், இலங்கை அரசாங்கத்துடன் கொழும்புத் துறைமுக முனைய விவகாரத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதெனத் தெரிவித்த அவர், இவ்விடயம் குறித்த உண்மைத் தன்மையை, நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. கிழக்கு முனையம், இந்திய நாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்படமாட்டாது என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் இறுதியில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. துறைமுக ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, அரசாங்கம் தனது நோக்கத்தைக் கைவிட்டது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்குப் பதிலாக, மேற்கு முனையத்தை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தது. இத்தீர்மானத்துக்கு 'அதானி' நிறுவனமும் இணக்கம் தெரிவித்தது. தற்போது இவ்விடயம் குறித்து, இந்திய அரசாங்கம் மாறுப்பட்ட கருத்தை வெளியிட்டுள்ளது. ஆகவே, உண்மைத் தன்மையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்
தேசிய வளங்களைப் பிற நாட்டவர்களுக்கு விற்கும் உரிமை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் என எவருக்கும் கிடையாது. இவர்களிடம் நாட்டு மக்கள் தற்காலிகமாகவே ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துள்ளார்கள். ஆகவே, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும். இல்லாவிடின் மக்களின் வெறுப்பைப் பெற்றுக் கொள்ள நேரிடும் என்றார்.
6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025