2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முறைபாடுகளை முன்வைப்பதற்கான திகதி நீடிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசார​ணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் திகதியை மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை நீடிப்பதற்கு, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக எதிர்ப்பார்த்திருக்கும் பலரின் வேண்டுகோளை கவனத்தில் எடுத்தே இதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதென, இந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்றுடன், இதன் கால எல்லை நிறைவடைந்துள்ள நிலை​யிலே அது தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக தற்போதைய அரசாங்கத்தால் இந்த ஆணைக்குழு அண்மையில் உருவாக்கப்பட்டது.

இதற்கமைய இதுவரை 315 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .