2020 நவம்பர் 28, சனிக்கிழமை

முறைப்பாடு அடுத்த வருடம் விசாரணைக்கு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி ஆவணங்களைத் தயாரித்து,தலைமன்னார் பிரதேசத்தில் இடமொன்றை விற்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர்களின் ஒருவரான,  ரிஸ்கான் பதியூதீன் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்த வருடம் ஜனவரி 21ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த முறைப்பாடு  இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த முறைப்பாடு தொடர்பாக அரச பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என, குற்ற விசாரணைப் பரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அரச பகுப்பாய்வு அறிக்கையை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த முறைப்பாட்டை அடுத்த வருடம் எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--