Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
A.K.M. Ramzy / 2020 நவம்பர் 29 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலை வேளை யில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை யோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
தென்கிழக்குவங்காள விரிகுடாவில்அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தொடர்ந்து, இது வானிலையில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 Jul 2025