2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மஹர சம்பவம்; 4 விசாரணை குழுக்கள் நியமனம்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 4 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர்களுள் ஒருவரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (1) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சிறைச்சாலைகள் ஆணையாளர் தலைமையில், சிறைச்சாலை திணைக்கள மட்டத்திலிருந்து விசாரணைகளை முன்னெடுக்க குழுவொன்றும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்க இரண்டாவது குழுவும் நீதி அமைச்சரால் ஓய்வுப்பெற்ற மேன்முறையீட்டு நீதியரசர் குசலா சரோஜினி வீரவன்ஸ தலைமையில் ஐவர் அடங்கிய மூன்றாவது குழுவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினால் விசாரணைகளை முன்னெடுக்க நான்காவது குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .