2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மஹிந்தவுக்கு மட்டற்ற மரியாதை

Yuganthini   / 2017 ஜூன் 26 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானுக்கு, இம்முறை தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தேவையான சகல நெறிமுறை உதவிகள் மற்றும் மரியாதைகளையும் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.   

அரசியல்வாதிகளின் வெளிநாட்டுக்கான விஜயம் தொடர்பான சுற்றறிக்கைக்கு முரணாக, அவருடைய தனிப்பட்ட விஜயத்தின் போது நடந்துக்கொள்ளுமாறு, ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவுரை வழங்கியுள்ள நிலையிலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பாக, மே மாதம் 29ஆம் திகதியன்று தனக்கு மின்நகலொன்று கிடைத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவருடன் வரும் 12 பேரடங்கிய பிரதிநிதிகள் குழுவுக்குத் தேவையான நெறிமுறை உதவிகளை வழங்குமாறு அதில் கூறப்பட்டிருந்ததாகவும். ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதமர நீதியரசர், அமைச்சரவை அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், இராஜாங்க அமைச்சர் மற்றும் தூதுவர்கள் ஆகியோரின் தனிப்பட்ட விஜயத்தின் போதே, அரசியல்வாதிகளுக்கான வெளிநாட்டுப் பயணங்களுக்கான சுற்றறிக்கை பின்பற்றப்படத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X