2024 மே 16, வியாழக்கிழமை

பௌசிக்கு நோட்டீஸ்

Janu   / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திற்கு 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியை  மே மாதம் 22 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, திங்கட்கிழமை (29) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நெதர்லாந்தில் இருந்து வழங்கப்பட்ட Land Cruiser வாகனத்தை மோசடி செய்து அரசாங்கத்திற்கு 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்  ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குற்றம் சாட்டப்பட்ட  ஏ.எச்.எம்.பௌசி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .