Editorial / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தலை, பழைய முறைமையில் நடத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான கூட்டம் ஒன்று கடந்த வியாழக்கிழமை(09) நாடாளுமன்ற கட்டட வளாகத்தினுள் இடம்பெற்றிருந்தது. இதில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களான, அமைச்சர் ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணமுடிகின்றது.
இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago