2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மஹிந்த - லோஹானுக்கு நிழல் அமைச்சரவை வேண்டாமாம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 08 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியினரால் நேற்று வியாழக்கிழமை (07) நியமிக்கப்பட்ட அமைச்சரவையிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த விலகியுள்ளார்.

இவருக்கு, நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிழல் அமைச்சரவை தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும் ஊடகங்கள் வாயிலாகவே தான் அதுபற்றி அறிந்துகொண்டதாகவும் ரத்வத்த எம்.பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை அவர், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் டலஸ் அலகப்பெருமவிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி நிழல் அமைச்சரவையிலிருந்து தன்னையும் நீக்கிவிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு, அந்த அமைச்சரவையின் ஊடாக, பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சுக்களுக்குப் பதிலாக, கண்காணிப்பு எம்.பி.க்களை நியமிக்குமாறே, ஒன்றிணைந்த எதிரணிக்கு, மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தவிர, நிழல் அமைச்சரவையொன்றை நியமிக்குமாறு அவர் அறிவுறுத்தவில்லை என்றும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .