2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு ஆதரவு; முஸ்லிம் சமாதான அமைப்பு அறிக்கை

Super User   / 2010 மே 27 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி கிடைக்காமைக்கு முன்னாள் அமைச்சர் அமீர் அலியே காரணம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹர் சாலி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு முஸ்லிம் சமாதான அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசியல் அந்தஸ்தினை வழங்கிய முன்னாள் அமைச்சர் அமீர் அலி தொடர்பான இவ்வாறான விமர்சனங்கள் தொடரும் பட்சத்தில் ஜவாஹர் சாலிக்கு எதிராக பகிரங்க கண்டன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அந்த அமைப்பு விடுத்துள்ள அறக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 

  அத்துடன் ஜவாஹர் சாலியின் மாகாண உறுப்பினர் பதவியினையும் மீளப் பெற்றுக்கொள்ள கட்சியினூடாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குறித்த அமைப்பு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. (R.A) 

  Comments - 0

  • xlntgson Friday, 28 May 2010 09:01 PM

    அமைச்சு பதவிகள் இல்லாமல் சேவை செய்ய இயலாதா? பாராளுமன்ற அமைச்சரவையில் இத்தனை அமைச்சர்கள் இருக்கும் போது மாகாண அமைச்சர்கள் எதை சாதிக்க இயலும்? சுசில் பிரேமஜயன்த முன்பு முதலமைச்சராக இருந்து பின் கல்விஅமைச்சராக இருந்தார்.அதனால் அவர் கல்வி எவ்வளவு தூரம் பகிரப்பட்ட அதிகாரம் என்று அறிந்திருந்தார். ஆகவே முன்னாள் முதலமைச்சரை கொழும்பில் சுகாதாரஅமைச்சராக நியமிக்கும் போதுதான் சுகாதாரஅமைச்சு அர்த்தமுள்ளதாக ஆகும், நாடு முழுவதும் 8 சுகாதார அமைச்சர்கள் இருக்கின்றனர், மாகாண முறையில் நம்பிக்கை இல்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--