2026 ஜனவரி 21, புதன்கிழமை

முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர் சடலமாக மீட்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைகழுவச் சென்றபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம், இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளது என, பானம பொலிஸார் தெரிவித்தனர்.

போல் ஸ்டுவாட் மக்லன் (வயது 24) என்ற பிரித்தானிய ஊடகவியலாளரே, நேற்று (14) முதலையால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

சுற்றுலா நிமித்தம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், அறுகம்பை பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

நண்பர்களுடன் பொத்துவில் கோட்டக்கல்லி கடற்பகுதிக்குக்  நீராடச் சென்றிருந்த அவர், முதலைக் குன்று என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் கைகழுவச் சென்றபோது, அவரை முதலை இழுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினர் மற்றும் பானம பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் பின்னரே, அருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X