2026 மார்ச் 05, வியாழக்கிழமை

முதவாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக,வைத்திய பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (7) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 34 வயதுடைய பெண்ணுக்கு, மூளைச் சாவடைந்த 24 வயதுடைய இளைஞரின் இருதயம் பொருத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அந்த இளைஞரின் 2 சிறுநீரகங்களும்,2 நோயாளர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர்கள் ஆராக்கியமாக இருப்பதாகவும் அவர்களை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இந்த அறுவை சிகிச்சைக்காக, 6 வைத்தியசாலைகளைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட பல்துறை மருத்துவ நிபுணர்கள், 20 மருத்துவர்கள் பஙகுபற்றியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .