2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

முனசிங்க பதவிநீக்கம்

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘லிட்ரோ காஸ்’ நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ். முனசிங்க பதவிநீக்கப்பட்டார் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி, 60 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், அவர் கடந்த திங்கட்கிழமை (09) கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில், எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே, அவரை பதவிநீக்கம் செய்துள்ளதாக, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .