Editorial / 2018 நவம்பர் 08 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பொதுச் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றஞ்சுமத்தியே இந்த முறைப்பாடு இன்று செய்யப்படவுள்ளதாக, குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்றுடன் 13 தினங்கள் கடந்துள்ள நிலையில்,முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து அலரி மாளிகையில் தங்கியிருந்து பொது சொத்துகளை தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள், வீடுகளை இதுவரை கையளிக்கவில்லையென்றும் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026