2024 மே 03, வெள்ளிக்கிழமை

‘மைத்திரியை ஏன் கைதுசெய்யவில்லை?’

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஏன்? கைது செய்யவில்லையென என்பதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து பலரும் தன்னிடம் வினவுவதாக, தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, முன்னாள் எம்.பி உதய கம்மன்பில, அரசமைப்பின் 35(1) பிரிவின் பிரகாரம் அவர் தப்பித்துகொள்கிறார் என குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

அரசமைப்பின் 35(1)ஆம் பிரிவின் பிரகாரம், எவரேனுமாள் ஜனாதிபதி என்ற பதவியை வகிக்கின்றபோது, அவரது பதவி முறையில், அல்லது தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப்பட்ட எவ்விடயம் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் அல்லது குடியியல் வழக்கு தொடுக்கப்படுதல் அல்லது தொடர்ந்து நடத்தப்படுதல் ஆகாது என  குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .