R.Maheshwary / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கதென்றும் சாடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரான அமீர் அலி, யாரை திருப்திப்படுத்துவதற்கு ரிஷாட் கைதுசெய்யப்பட்டார் என வினவினார்.
வௌ்ளவத்தை சுப்புன் வர்த்தகக் கட்டடத்தில், நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
இது யாரை திருப்திப்படுத்துவதற்காக செய்யப்பட்டது என்ற வினா எழும்புகின்றது என்றும் அதாவது இத்தாக்குதல் குறித்து 22ஆம் திகதி முக்கிய அறிவிப்பை விடுக்கவுள்ளதாக பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்த போது, அவர் முக்கியமான விடயத்தை சொல்லப் போகிறார் என்று நம்பிக்கை வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சியின் தலைவனாகவும் இந்நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் தலைவனாகவும் மதிக்கப்படும் ரிஷாட், இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளமையானது ஜனநாயகத்தை கேலிக்குட்படுத்தும் செயலாகவே தாம் பார்ப்பதாக அவர் சாடினார்.
“பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்படும்போது சபாநாயகரின் அனுமதியையும் அல்லது கைதுசெய்யப்படும் போது கைதுக்கான காரணத்தை உறவினர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கவோ இல்லை. என்ன காரணத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது இன்னும் எமக்கு தெரியவில்லை என்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், அவர் க்ளோசியஸ் நிறுவனத்துக்கு பித்தளை வழங்கியமைக்காக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த வாரம் எமது தலைவர் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு நேரடியாக சென்று இது தொடர்பில் விரைவில் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
எனவே அவரது கைது சட்டவிரோதமானது என்பதால் இந்த புனிதமான மாதத்தில் இந்த ஜனநாயகம் வாழவும் காட்டு மிராண்டி அரசியல் சித்தாந்தத்தை ஒழிப்பதற்கான விடுதலைக்கான பிரார்த்தனையுடன் தேவையேற்படின் குனூத் பிரார்த்தனையும் செய்யுமாறும் ஏனெனில் கடந்த காலங்களில் குனூத் பிரார்த்தனை செய்யப்பட்டதால் அரசாங்கம் கவிழ்ந்த சந்தர்ப்பமும் ஏற்பட்டது” என்றும் தெரிவித்தார்.
9 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Jan 2026