A.K.M. Ramzy / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்பிலிருந்த பருத்தித்துறை மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளில் மூவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன்
யாழ்ப்பாணம், கரவெட்டி இராஜகிராமத்தில் தனிமைப் படுத்தல் முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கரவெட்டி கிராமத்தில் கொரோனா தொற்று கண்டறி யப்பட்டவர், அங்கு பலருடன் பழகியுள்ள நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் முடக்கம் அமுலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்தவரும் பலருடன் பழகியுள்ளார்.
இதையடுத்து தொற்று பரவலைத் தடுப்பதற்காக இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது.
சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றனர்.
அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேபோல், பாசையூர் மேற்கு மற்றும் குருநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன” எனவும் தெரிவித்தார்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago