Editorial / 2020 மே 22 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர்களிடமிருந்த 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. அவை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
முறைப்பாடுகளின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முனெடுத்து வந்த நிலையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக 7 கொள்ளைச் சம்பவங்களுடன் மூவருக்கும் தொடர்புள்ளமை, சந்தேக நபர்களிடம் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களின் மூலம் கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்படும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
4 சந்தேக நபர்களிடமிருந்தும் 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் தொலைக்காட்சிப் பெட்டி, மோட்டார் சைக்கிள் ஒன்று, 6 அலைபேசிகள், அப்பிள் ஐபாட் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
48 minute ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
8 hours ago