2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

ராஜபக்ஷர்களுக்கு மூன்றாம் சுற்று

Gavitha   / 2021 ஜனவரி 17 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் மூன்றாம் கட்ட நடவடிக்கையின்  போது, ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் முதலாம் கட்ட நடவடிக்கையின் போது, சுகாதார ஊழியர்கள் உள்வாங்கப்படுவர் என்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கையில், பாதுகாப்புப் படையினர் உள்வாங்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட நடவடிக்கையில், 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் உள்ளீர்க்கப்படுவர் என்றும் அதன்படி, ஜனாதிபதியும் பிரதமரும் மூன்றாவது சுற்றில் உள்ளானர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .