2021 மார்ச் 08, திங்கட்கிழமை

லொத்தர் விற்பனை செய்தவருக்கு கொரோனா

S. Shivany   / 2021 ஜனவரி 24 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமட நகரில் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்த நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்டதால், சுகாதாரத் துறையினருக்கு அவர் அறிவித்ததன் பிரகாரம், அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுக்கமைய அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 18 ஆம் திகதிக்குப் பின்னர், அவரிடம் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளை கொள்வனவு செய்தவர்கள், உடனடியாக வெலிமட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .