Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 05:52 - 1 - {{hitsCtrl.values.hits}}
விசேட பிரமுகர் (VIP) ஒருவரின் மகனுடைய திருமணம் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று (30) நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அந்த திருமண வைபவத்துக்கான ஏற்பாடுகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்றும் பொலிஸாரின் தலையீட்டை அடுத்து அத்திருமண வைபவம் இடைநிறுத்தப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை கேள்வியுற்று பொலிஸார் அங்குச் சென்றவேளை, மண்டபத்தில் 35 பேர் மட்டுமே இருந்துள்ளனர் என அறியமுடிகின்றது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திருமணம் உள்ளிட்ட பொது வைபவங்களை நடத்தமுடியாது. அந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தையும் மீறியே திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, கொள்ளுப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
raj Friday, 30 October 2020 07:06 PM
யார் அந்த விஐபி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேல் மாகாணத்தில் அமுல் படுத்துவது தெரியாதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .