2021 மார்ச் 03, புதன்கிழமை

வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

J.A. George   / 2021 ஜனவரி 28 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் – பாலாவி – கல்லடி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் – கல்லடியிலிருந்து பயணித்த லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  20 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுவதுடன், விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .