2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

விகாரைக்குள் புகுந்து யானை தாக்கியதில் குழந்தை பலி

Menaka Mookandi   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருவலகஸ்வெவ, ரஜவிகம விகாரையில், இன்று (30) மாலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடொன்றின் போது காட்டு யானையொன்று புகுந்து அட்டகாசம் புரிந்ததால், குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில், நான்கு வயதான ஆண் குழந்தையொன்றே உயிரிழந்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

பௌர்ணமி தினமான இன்றைய தினம், குறித்த விகாரையில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில், குறித்த குழந்தை, தனது தாயுடன் அதில் கலந்துகொண்டுள்ளது. இதன்போது, காட்டு யானையொன்று விகாரைக்குள் புகுந்து அட்டகாசம் புரியத் தொடங்கியுள்ளது.

இதன்போது, குறித்த குழந்தை, அதனது தாயால் கைவிடப்பட்டிருந்த நிலையில், யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்துள்ள குழந்தை, ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .